பொதுமக்களுக்கு விழிப்புணர்வு! கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் அமைச்சர் விஜயபாஸ்கர்!

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு! கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் அமைச்சர் விஜயபாஸ்கர்!

Update: 2021-01-20 09:00 GMT

பொதுமக்களின் பயத்தை போக்குவதற்காக கொரோனா தடுப்பூசியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செலுத்திக்கொள்கிறார். தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கண்டுப்பிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் குறித்து பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

இதனால் பொதுமக்களுக்கு பயம் ஏற்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு லட்சக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். இதற்காக விஞ்ஞானிகள் இரவு, பகல் என்று பாராமல் கொரோனா தடுப்பு மருந்துகளை கண்டுப்பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இதன் வெற்றியாக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த தடுப்பு மருந்துகள் கொரோனாவை அழிக்கிறது என ஆய்வில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்துதான் இரண்டு மருந்துகளுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து கடந்த 16ம் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதே போன்று தமிழகத்திலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தது. அதில் திட்டமிட்டு எதிர்க்கட்சிகள் பொய்யான தகவலை மக்களிடம் பரப்பி வருகின்றனர். அதாவது முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஏன் முதலில் தடுப்பூசியை போட்டுக்கொள்ளவில்லை என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தடுப்பூசியை போட்டுக்கொண்டார். இதன் பின்னர் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புறவுப்பணியாளர்கள் என அனைவருக்கும் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்கிறார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இன்று காலை 9.45 மணிக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்கிறார். மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்குவதற்காக தடுப்பூசி போட்டுக்கொள்வதாக கூறியுள்ளார். இனிமேல் ஆவது ஓட்டு அரசியல் செய்யும் கட்சிகள் திருந்த வேண்டும் என்பது அனைத்து பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
 

Similar News