அபாரம்! 2030-ம் ஆண்டுக்கு உலக சுகாதார நிறுவனம் நிர்ணயம் செய்த வளர்ச்சியை, 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே எட்டிய  தமிழ்நாடு!

அபாரம்! 2030-ம் ஆண்டுக்கு உலக சுகாதார நிறுவனம் நிர்ணயம் செய்த வளர்ச்சியை, 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே எட்டிய  தமிழ்நாடு!

Update: 2020-12-27 08:00 GMT

உலக நாடுகளே வியந்து பாராட்டும் வகையில் வகையில் தமிழக சுகாதாரத்துறை சிறந்து விளங்குகிறது என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பாராட்டு தெரிவித்துள்ளார்.

தனியார் மருத்துவமனைக்கு சென்றால் பொதுமக்களுக்கு அதிகமான மருத்துவ செலவாகும் என்பதை கருத்தில் கொண்டு ஏழை எளிய மக்களின் உடல்நலனை பாதுகாக்கும் நோக்கத்தோடு முதலமைச்சர் தொலைநோக்கு பார்வையோடு அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைக்கு நிகராக அரசு மருத்துவமனைகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே கொரோனா தொற்றை மிகவும் கட்டுக்குள் கொண்டுவந்தது நமது மாநிலம்தான். உலக நாடுகளே வியந்து பாராட்டும் வகையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை தீவிரமாக செயல்பட்டு சிறந்து விளங்குகிறது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக ஏறத்தாழ 99.90 சதவீதம் அரசு மருத்துவமனையில் பிரசவங்கள் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டில் குழந்தைகளின் இறப்பு விகிதமும், கர்ப்பிணி தாய்மார்களின் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் நிர்ணயம் செய்த வளர்ச்சியை 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ்நாடு அரசு இலக்கை எட்டியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சி பெற்ற மாநிலமாக உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து துறையிலும் இந்திய அளவில் முதல் பரிசு பெற்று இருக்கிறது. குறிப்பாக கூட்டுறவுத்துறை மட்டும் அகில இந்திய அளவில் 29 பரிசுகள் பெற்றுள்ளது.

இரண்டு முறை ஜனாதிபதி விருதும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒவ்வொரு துறையும் பல்வேறு சாதனைகள் பெற்று உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க ஒரு முக்கிய நிகழ்வு 24 மணி நேரமும் தங்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் அளிப்பது வேறு. சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பது வேறு. இந்தியாவை யார் ஆள வேண்டும், தமிழகத்தை யார் ஆள வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். எனவே மக்களுக்காக பாடுபடும் தமிழக அரசுக்கு என்றென்றும் பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Similar News