100 பேருடன் டெல்லி செல்ல முற்பட்ட அய்யாக்கண்ணு.. ரயில் நிலையத்தில் அலேக்கா தூக்கிய போலீஸ்.!

100 பேருடன் டெல்லி செல்ல முற்பட்ட அய்யாக்கண்ணு.. ரயில் நிலையத்தில் அலேக்கா தூக்கிய போலீஸ்.!

Update: 2020-12-03 18:47 GMT

டெல்லியில் வேளாண் சட்டத்திற்கு எதிராக சில விவசாய அமைப்புகள் போட்டம் நடத்தி வருகிறது. அதுவும் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியின் தூண்டுதலின் பேரில் விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள்.


இந்நிலையில், டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு செல்ல முயன்ற விவசாய சங்க தலைவர் அய்யக்கண்ணு உள்ளிட்ட 100- பேரை போலீசார் ரயில் நிலையத்தில் அதிரடியாக கைது செய்தனர்.

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையம் வந்தனர். அப்போது, அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், அனைவரையும் கைது செய்து அழைத்து சென்றது.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் போலீசாரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக பேசிய அய்யாக்கண்ணு: அகில இந்திய விவசாய சங்க ஒருங்கிணைப்புகுழுவைச் சேர்ந்த தன்னை அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் தூண்டுதலால் போலீசார் கைதுசெய்துள்ளனர் என கூறினார்.


தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் வேளாண் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் விவசாயி என்ற போர்வையில் உள்ளவர்களை எதிர்க்கட்சி தூண்டி விட்டு மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்த செய்கிறது. இவர்களின் சாயம் விரைவில் வெளுக்கும்.

Similar News