தடை நீக்கம்.. நாளை முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி.!

தடை நீக்கம்.. நாளை முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி.!

Update: 2020-12-14 16:19 GMT

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் சுற்றுலாத்தளங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் அனைத்து சுற்றுலாத்தளங்களும் திறக்கலாம் என வெளியிட்டிருந்தது.

இதனை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையை மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்தன. அதே போன்று மற்ற பகுதிகளில் உள்ள பூங்காங்களும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அனைத்தும் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா பொதுமுடக்கத்தால் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த குற்றால அருவிகளில் நாளை முதல் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் இன்று முதல் பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற விதிமுறைகளை தமிழக அரசு கூறியிருந்தது.

இந்நிலையில், தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் நாளை முதல் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
 

Similar News