குற்றால அருவிகளில் குளிக்க தடை நீக்கம்.. புத்தாண்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்.!

குற்றால அருவிகளில் குளிக்க தடை நீக்கம்.. புத்தாண்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்.!

Update: 2021-01-01 15:22 GMT

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா தளங்கள் மூடப்பட்டிருந்தது. தமிழக அரசு தற்போது சில தளர்வுகளை தளர்த்தி வந்துள்ளது.

அந்த வகையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வந்த மழை காரணமாக அருவிகளில் அதிகளவு நீர்வரத்து காணப்படுகிறது. இதன் காரணமாக அருவிகளில் அதிகளவு நீர் வரத்து காணப்படுகிறது. இதன் காரணமாக பாதுகாப்புக் கருதி குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, உள்ளிட்ட சிறிய அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், மெயின் அருவியில் குளிக்க நேற்று காலை முதல் விதிக்கப்பட்டிருந்த தடை, நீர் வரத்து சற்று குறைந்ததால், விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
 

Similar News