ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை.. தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மசோதா.!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை.. தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மசோதா.!

Update: 2021-02-04 09:29 GMT

சமீப காலமாக ஆன்லைனில் சூதாட்டத்தில் இளைஞர்கள் ஈடுபட்டு தற்கொலை செய்து கொள்கின்ற நிலை உருவாகியுள்ளது. இதனை தடுக்கும் விதமாக தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மசோதாவை தாக்கல் செய்கிறார்.

நாடு முழுவதும் ஆன்லைன் சூதாட்டத்தால் பல இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை தொலைத்து விட்டு தவித்து வருகின்றனர். பணத்தை வைத்து விளையாடும் விளையாட்டுக்கு பலர் அடிமையாகியுள்ளனர். அவர்கள் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு செல்வதை காணமுடிகிறது.

இத்தகையை சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் பலர் குரல் கொடுத்து வந்தநிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 21ம் தேதி தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.

இந்நிலையில், இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்கிறார். இந்த மசோதா தாக்கலுக்கு பின்னர் ஆன்லைன் விளையாட்டு முற்றிலும் தடைபடுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பல இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்து தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News