தூத்துக்குடி: முழுஊரடங்கால் வாழைத்தார் விலை சரிவு: கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்.!

கொரோனா முழு ஊரடங்கு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

Update: 2021-05-31 11:06 GMT

கொரோனா முழு ஊரடங்கு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரையில் தாமிரபரணி பாசனத்தில் 46,107 ஏக்கர் நஞ்செய் நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளது. இதில் 20 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான இடங்களில் வாழைத்தார்கள் நல்ல முதிர்ச்சியடைந்து அறுவடைப் செய்யப்பட்டு வருகிறது.




 


இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயப் பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடைகள் அனைத்து அடைக்கப்பட்டுள்ளதால், விவசாயிகளின் பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் தங்களின் வாழைத்தார்கள் வீணாகப்போவதை பார்த்து கண்ணீர் வடித்து வருகின்றனர். விவசாயிகளின் பொருட்களை விரைவாக கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News