பங்களாதேஷில் அரங்கேறும் அநீதியை கண்டித்து, புதிய தமிழகம் கட்சி முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி ஆதரவு !
பங்களாதேஷில் சிறுபான்மை இந்துக்களுக்கு அரங்கேறும் அநீதியை கண்டித்து, புதிய தமிழகம் கட்சித் தலைவர் திரு. Dr.கிருஷ்ணசாமி ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தார். அந்த போராட்டத்திற்கு இந்து முன்னணி ஆதரவளித்துள்ளது.
இது குறித்து இந்து முன்னணி வெளியிட்ட அறிவிப்பில் :
புதிய தமிழகம் கட்சித் தலைவர் திரு. Dr.கிருஷ்ணசாமி அவர்கள் பங்களாதேஷில் இந்துக்கள் மீது நடத்தப்படுகின்ற வன்முறையைக் கண்டித்து அறிவித்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு இந்துமுன்னணி முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறது.
புதியதமிழகம் முன்னெடுக்கும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.