வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் தள்ளிவைப்பு: அப்போ வங்கி செயல்படுமா? செயல்படாதா?

சமரச பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட திருப்பும் காரணமாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் தள்ளிவைப்பு.

Update: 2023-01-29 01:05 GMT

வங்கி ஐந்து நாட்கள் வேலை தேசியத் திட்டத்தை ரத்து செய்வது, பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருதல், சம்பளம் உயர்வு பேச்சு வார்த்தை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வருகின்ற 30, 31 ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஐக்கிய வங்கி தங்கங்கள் கூட்டமைப்பு அனுப்பி இருந்தது. ஆனால் இன்று நான்காவது சனிக்கிழமை என்பதாலும் நாளை ஞாயிற்றுக்கிழமை அடுத்த இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் காரணமாக தொடர்ந்து நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு வங்கி சேவை முடங்கும் அபாயம் நிலவுகிறது.


இதன் காரணமாக மும்பை துணை தலைமை தொழிலாளர் தொழிலாளர் அலுவலர் முன்னிலையில் கடந்த 24ஆம் தேதி சமரச பேச்சுவார்த்தை நடந்தது. அதில் எந்த முடிவு எடுக்கப்படவில்லை நேற்று முன்தினம் மீண்டும் பேச்சு வார்த்தை நடந்தது. அதில் புதிய திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அளித்த ஒரு பேட்டியின் போது இது பற்றி கூறுகையில், 27ஆம் தேதி நடந்த பேச்சு வார்த்தையில் ஒன்பது வங்கி ஊழியர் சங்க தலைவர்களும் கலந்து கொண்டனர்.


பேச்சு வார்த்தைக்கு பிறகு வேலை நிறுத்தத்தை தள்ளி வைக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை, ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், பழைய திட்டத்தின் மீண்டும் கொண்டு வருதல் ஆகிய மூன்று முக்கிய கோரிக்கைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று கூறப்பட்டது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தேதி நிர்ணயிக்கப்படும். அதுவரை வேலை நிறுத்தம் தள்ளி வைக்கப்படுகிறது என்று கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News