சென்னையில் 18 பேருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு? என்ஐஏ ஆட்டத்தால் அலறிப்போன சிலீப்பர் செல்கள்!
தடை செய்யப்பட்ட அமைப்பு
கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு இந்தியா முழுவதும், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் உள்ள நபர்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் தயார் செய்து வருகிறது. சென்னையில் 18 பேர் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பில் உள்ளனர் என தெரியவந்துள்ளது. சென்னையில் மண்ணடி உள்ளிட்ட ஐந்து பகுதிகளில் சென்னை காவல்துறையின் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்பு
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய நபர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள், தடை செய்யப்பட்ட அமைப்புடன் பணபரிவர்த்தனை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் 5 நபர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
என்.ஐ.ஏ. சோதனை ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில் சென்னை காவல்துறையினர் தனியாக விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோல தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பில் இருக்கும் நபர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு, தமிழ்க போலீசார் தனியாக சோதனை நடத்தி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
Input From: PT