பாகிஸ்தானில் சாலையில் விழுந்த பேனர்.. நிகர் புயலில் விழுந்ததாக பொய் செய்தி பரப்பும் திமுக.!
பாகிஸ்தானில் சாலையில் விழுந்த பேனர்.. நிகர் புயலில் விழுந்ததாக பொய் செய்தி பரப்பும் திமுக.!
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் தமிழகத்தை தாக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், பாண்டிச்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காற்றும் வேகமாக வீசி வருகிறது.
இந்நிலையில், நேற்று மாலையில் இருந்து சென்னை, பூந்தமல்லியில் ஒரு பேனர் கீழே விழுந்ததாக சமூக வலைளதங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அந்த வீடியோ வேகமாக பரவி வந்தது. இதனை தமிழகத்தில் பலரும் தங்களது முகநூல் பக்கத்தில் ஷேர் செய்தனர்.
இந்த வீடியோ தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி நகரில் கடந்த ஆகஸ்ட் மாதம் புயல் ஏற்பட்டுள்ளது. அப்போது காற்று பலமாக வீசப்பட்டதால் ஒரு பேனர் சாலையில் தூக்கி வீசப்பட்டது.
இது தமிழகத்தில் நடந்த சம்பவம் என்று திமுகவை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் போலீயாக பரப்பி வருகின்றனர். இதற்கு அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் தக்க பதிலடி அளித்து வருகின்றனர். போலி செய்தி பரப்புவதில் திமுக கிள்ளாடியாக செயல்படுகிறது. அதனை அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் முறியடிப்பார்கள் என கூறியுள்ளனர்.