நீலகிரியில் தொடர் அட்டகாசம் செய்த கரடியை பிடித்த வனத்துறையினர்.!
நீலகிரியில் தொடர் அட்டகாசம் செய்த கரடியை பிடித்த வனத்துறையினர்.!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன் கிராமம். இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. சமீபகாலமாக இந்த கிராமத்தில் கரடிகள் தொல்லை அதிகரித்து வந்துள்ளது.
இது தொடர்பாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இது பற்றிய புகாரின் பேரில் வனத்துறையினர் கரடியை பிடிப்பதற்காக அந்த கிராமத்தில் முகாமிட்டனர். இதற்கு என்று கூண்டை வைத்து அதற்குள் சாப்பிடுவதற்கு பழ வகைகள் வைக்கப்பட்டது. இதனையடுத்து மறைந்திருந்து வனத்துறையினர் நோட்டமிட்டு வந்தனர்.
அதிகாலை ஒரு மணியளவில் அங்கு வந்த மூன்று கரடிகளில் ஒரு கரடி மட்டும் கூண்டிற்குள் சிக்கியது. கூண்டிற்குள் மாட்டிய கரடி கத்த ஆரம்பித்தது. மற்ற 2 கரடிகளும் அங்கிருந்து உயிர் தப்பித்தால் என்று ஓட்டம் பிடித்தது. பிடிப்பட்ட கரடியை வனத்துறையினர் மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். இதனிடையே ஒரு கரடி மட்டும் பிடிபட்டதால், மற்ற 2 கரடிகள் மறுபடியும் தொல்லை தரும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருக்கின்றனர். அதனையும் விரைவில் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.