இந்து மத நம்பிக்கைகளை சீர்குலைக்கும் யுடியூப் சேனல் - இந்து அமைப்பு கொடுத்த புகார்!

இந்து மத நம்பிக்கைகளை சீர்குலைக்கும் விதமாக வீடியோக்களை பதிவிடும் youtube சேனல் மீது இந்து அமைப்பினர் புகார் ஒன்றை அழைத்து இருக்கிறார்கள்.

Update: 2022-11-01 03:56 GMT

இந்து மத நம்பிக்கைகளை சீர்குலைக்கும் விதமாக தமிழ் சிந்தனையாளர் பேரவை என்ற youtube சேனல் மீது நடவடிக்கை எடுக்கும் படி பாரத் இந்து முன்னணி அமைப்பினர் சென்னையில் அமைந்துள்ள கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்து இருக்கிறார்கள். பாரத் இந்து முன்னணி அமைப்பின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் சுரேஷ் அவர்கள் அளித்த புகாரில் இது பற்றி கூறுகையில், இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் அவமானப்படுத்தும் வகையில், மத உணர்வுகளை தூண்டி, அமைதியை சீர்குலைக்கும் வகையில் 'தமிழ் சிந்தனையாளர் போரவை' என்ற பேரவை என்ற youtube சேனல் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டில் இருக்கிறார்கள். 


மேலும் இந்த youtube சேனலை இயக்கும் நபர் கோதார கௌரி விரதம் என்ற தலைப்பில் இந்து மதத்தின் பல ஆண்டுகளாக இருந்து வரும் பூஜை படங்கள் மற்றும் நவராத்திரியின் மாண்புகளை மிகவும் கொச்சைப்படுத்தும் விதமாக அருவருக்கத்தக்க வகையில் பேசுகிறார் என்றும், அவருடைய புகாரில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.


மேலும் இந்துகள் பூஜித்து வரும் துர்க்கை அம்மனை பற்றி மிகவும் கேவலமாக விமர்சித்து இருக்கிறார்கள். இந்து இந்திய பெண்களை அவமதித்தும் அவர்கள் பேசிய வீடியோ இருக்கிறது மற்றும் மதத்தினரின் தூண்டுதலோடு மிகப் பெரிய அளவில் கலவரத்தை தூண்டும் நோக்கத்துடன் இந்த யூடியூப் சேனல் செயல்படுவதாக தெரிய வருகிறது. இந்த சேனலை தடை செய்து, இதை இயக்கும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு பாரத் இந்து அமைப்பினர் சார்பில் கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News