இனிமேல் டாஸ்மாக்கில் பில் கட்டாயம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

இனிமேல் டாஸ்மாக்கில் பில் கட்டாயம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

Update: 2021-01-21 17:53 GMT

தமிழகத்தில் டாஸ்மாக் கடையை அரசே நடத்தி வருகிறது. அப்படி நடத்தும் கடையில் அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு என்று அரசு மாத ஊதியம் கொடுத்து வருகிறது. ஆனால் அதனை பெற்றும், சரக்கு பாட்டில்கள் மீது அரசு நிர்ணியத்த தொகையை விட அதிகமாக வாங்குவதாக புகார்கள் எழுந்தது. இது போன்று தமிழகம் முழுவதும் ஏகப்பட்ட புகார்கள் விற்பனை பிரதிநிதிகள் மீது அளிக்கப்பட்டது.

இதனை தடுக்க வேண்டும் என்பதற்காக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது. அரசு மதுபானக்கடைகளில் வாங்கும் சரக்கு பாட்டில்களுக்கு உரிய ரசீது வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ரசீது வழங்கவில்லை என்றால் விற்பனை பிரதிநிதிகள் உட்பட அனைவரின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் அதனை விற்பனை பிரதிநிதிகள் கண்டு கொள்ள மாட்டார்கள் என மது பிரியர்கள் கூறுகின்றனர்.
 

Similar News