பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க கூட்டணி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி... மத்திய இணை அமைச்சர் கொடுத்த பதில்!

பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க கூட்டணி வலுவாக இருப்பதாக மத்தியில் அமைச்சர் தகவல்.

Update: 2023-04-04 01:45 GMT

சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் பா.ஜ.கவின் மாவட்ட அணி பிரிவு நிர்வாகிகள் மற்றும் சென்னை மாவட்ட நாடாளுமன்ற தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் வேற்று நடைபெற்றது. அதில் மத்திய இணை அமைச்சர் L.முருகன் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு இடையில் உரையாற்றினார். குறிப்பாக அவர் கூறும் பொழுது தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பல்வேறு இலக்குகளை வைத்து பணிகளை மிகவும் சிறப்பாக செயலாற்று வருகிறது.


குறிப்பாக மற்ற 50 தொகுதிகளின் 9 தொகுதிகள் தமிழகத்தில் உள்ளன. அதில் தென் சென்னையை முக்கிய தொகுதியாக கருதுகிறோம். 2024 தென் சென்னையில் பா.ஜ.க வெற்றி பெரும் பகுதியில் கட்சியினர் உழைத்துக் கொண்டு வருகிறார்கள். ஒன்பது ஆண்டுகளில் மோடி அரசு ஏராளமான பல்வேறு திட்டங்களில் வழங்கியது. மத்திய பட்ஜெட்டில் 6 ஆயிரம் கோடி இந்திய ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. 800 கோடியில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம், ஆயிரம் கோடி தாம்பரம் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.


முன்தினம் ஜே.பி.நட்டா அவர்களை மத்திய அமைச்சர் என்ற முறையில் மரியாதை நிமித்தமாக தற்போது சந்திக்கிறேன் அப்பொழுது அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணி வலிமையாக உள்ளது என அவரும், அமித்ஷாவும் கூறி இருக்கிறார்கள். பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையும் கூட்டணி கட்சியான அதிமுக தலைவர்களும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். எனவே எங்கள் கூட்டணி மிகவும் வலிமையான கூட்டணி. தி.மு.க கூட்டணிகளிலும் பல்வேறு சலசலப்பு இருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News