மனிதத் தன்மையற்ற தாக்குதல்.. தமிழக காவல்துறையின் விசாரணை இதுதானா? - சீறிய அண்ணாமலை!

விசாரணைக்கு அழைத்து வந்த கைதிகளை மனிதத் தன்மையற்ற முறையில் தாக்கியதாக எழுந்த குற்றத்திற்கு அண்ணாமலை கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.

Update: 2023-03-28 09:41 GMT

நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற வந்த குற்ற சம்பவங்கள் தொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் என்பவர் விசாரணை நடத்தி வந்தார். அப்பொழுது குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து, அவர்களுடைய வாயில் கற்களை போட்டு, அவர்களுடைய பற்களை பிடுங்கி கொடூரமான தாக்குதல் செயல்களில் ஈடுபட்டதாக சமீபத்தில் புகார்கள் எழுந்து இருக்கிறது. இது தொடர்பாக வீடியோக்கள் மற்றும் விசாரணை கைதிகளின் பரபரப்பு வாக்குமூலம் சமூக வலைதளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் ஒன்றும் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த புகார் தொடர்பாக நெல்லை மாவட்டம் கலெக்டர் கார்த்திகேயன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தற்போது உத்தரவிட்டு இருக்கிறார்.


குறிப்பாக இங்கு நடந்த பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட பகுதிகளை விசாரணை என்ற பெயரில் கொடூரமாக தாக்கி இருக்கும் சம்பவம் தற்போது வெளிவந்து இருக்கிறது. இதுவரை அம்பை சரகத்திற்கு உட்பட்ட கல்லிடைக்குறிச்சி, விக்ரமசிங்கபுரம், பாப்பங்குடி, அம்பிகை மகளிர் போலீஸ் நிலையம் ஆகிய ஐந்து போலீஸ் நிலையங்களின் குற்ற செயல்களில் ஈடுபட்டோர் 30க்கும் மேற்பட்டோர் தங்களுடைய பற்களை இழந்து இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணை தற்போது நடந்து வருகிறது. இது குறித்து பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தை ஆவேசமாக பதிவு செய்து இருக்கிறார்.


குற்றம் எதுவாக இருந்தாலும், விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கைதிகள் மீதான இத்தகைய தாக்குதல்கள் ஏற்றுக் கொள்ள முடியாதது. பாதுகாவலாக இருக்க வேண்டிய காவல்துறையிடமிருந்தே பொதுமக்கள் பாதுகாப்பு தேடும் அவலம் மிகவும் வருந்தத்தக்கது. ஏற்கனவே தமிழ்நாட்டில் அடிக்கடி நடக்கும் காவல் நிலைய மரணங்களால் மற்றும் இத்தகைய கொடூர தாக்குதல்கள் காரணமாக மக்கள் காவல் துறையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை குறைவதாக இருக்கிறது என்று தன்னுடைய கண்டனத்தை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பதிவு செய்திருக்கிறார்.

Input & Image courtesy: Oneindia News

Tags:    

Similar News