தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்ய வேண்டும்: பா.ஜ.க. தலைவர் எல்.முருகன்.!

சென்னை தரமணியில் உள்ள வி.எச்.எஸ். மருத்துவமனையில் பாஜக கிழக்கு மாவட்ட செயலாளர் சாய் சத்தியன் தலைமையில் பாஜக சார்பில் மத்திய அரசின் 8ம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு சேவை வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

Update: 2021-06-04 11:17 GMT

சென்னை தரமணியில் உள்ள வி.எச்.எஸ். மருத்துவமனையில் பாஜக கிழக்கு மாவட்ட செயலாளர் சாய் சத்தியன் தலைமையில் பாஜக சார்பில் மத்திய அரசின் 8ம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு சேவை வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே மருத்துவமனையில் 125 பேர் ரத்ததானம் செய்தனர். இந்த முகாமை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பார்வையிட்டார். இதன் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிகள் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். சிறுமிகளுக்கு மதிய உணவு வழங்கினார்.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அவர் எல்.முருகன், மத்திய அரசு சிபிஎஸ்இ தேர்வை ரத்து செய்துள்ளது. அதனை உச்சநீதிமன்றம் வரவேற்றுள்ளது. அதே போன்று தமிழகத்தல் 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதற்கு எவ்வளவு நாள் ஆலோசனை செய்வார்கள். உடனடியாக தேர்வை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக்கூறினார்.

Tags:    

Similar News