ராணுவ வீரரை மிரட்டிய வி.சி.க - பெரும்படையுடன் சென்று தோளோடு தோள் நின்ற பா.ஜ.க!
ராணுவ வீரரை மிரட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிருபர், ராணுவ வீரருக்கு ஆறுதல் கூறிய தலைவர் அண்ணாமலை.
சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி நிகழ்ச்சியில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது தமிழ்நாட்டை தனிநாடாக அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்கு என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் சமூக வலைத்தளங்கள் பக்கங்களில் தன்னுடைய கருத்தை பதிவு செய்தார்கள். அதேபோல இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குருமூர்த்தி என்ற ராணுவ வீரர், தனது வலைதளத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவர் தொலைபேசியில் மிரட்டியதாக, ஆடியோவை வெளியிட்டு குருமூர்த்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இதைத்தொடர்ந்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, குருமூர்த்தியை தொடர்பு கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார். மேலும் இது பற்றி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியின் போது அவர் கூறுகையில் தமிழகத்தில் சில கட்சிகள் தீவிரவாதத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
நாட்டிற்காக ராணுவத்தில் பணியாற்றும் ஒருவரிடம் இப்படி நடந்து கொள்வது கண்டிப்பாக வேண்டிய விஷயம் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். நிச்சயம் அவருடைய குடும்பத்திற்கு பா.ஜ.க ஆறுதல் கூறும் என்றும் அவர் கூறியிருந்தார். ராணுவ வீரர்களையே மிரட்டும் இந்த போக்கை கண்டித்து மணிமாறனை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Input & Image courtesy: Thanthi News