ஒரு திரைப்படத்தை விட மாட்டேன் என்கிறார்கள் - தி.மு.க'வின் சினிமா வியாபாரத்தை அம்பலப்படுத்திய அண்ணாமலை!
தமிழகம் முதல் முதல்வர் விளம்பரத்திற்காக செயல்படுகிறார் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி இருக்கிறார்.
தமிழகத்தில் தொடர்ச்சியான வண்ணம் பால் விலை மற்றும் மின் கட்டணம் உள்ளிட்ட அனைத்து விலைவாசிகளும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஏழை எளிய மக்களின் மிகவும் கடினமான வகையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்த விதமாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் ஆத்தூரில் தி.மு.கவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்பொழுது அவர் கூறுகையில் தமிழகத்தில் வெளியாக்கும் அனைத்து படங்களை ஓடி, ஓடி தி.மு.க வாங்குகிறது. விளம்பரத்திற்காக முதல்வர் அவர்கள் செயல்படுகிறார். சென்னை மக்கள் வெள்ளத்தில் மிதக்கின்ற ஒரு சூழ்நிலையில், தி.மு.க குடும்பம் மட்டும் லவ் டுடே என்ற படத்தை பார்க்க செல்கிறது.
எங்கு பார்த்தாலும் ஊழலில் நிழலாக அமைச்சர்கள் செயல் படுகிறார்கள். இப்படி ஒரு அரசாங்கத்தை இங்கு பார்த்திருக்க முடியாது. 2024ஆம் தேர்தலில் இந்தியா மிகப் பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. தமிழகத்தில் மாற்றங்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம். பிரதமர் மோடியாக தன்னை நினைத்து ஒவ்வொருவரும் தன்னுடைய பணியை சிறப்பாக செய்தால், வெற்றி நம் பக்கம் தான் தமிழகத்தில் நிச்சயம் மாற்றத்தை கொண்டு வருவோம் என்று அண்ணாமலை அவர்கள் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: Dinamalar News