தமிழகத்திற்கு வந்த முக்கிய பா.ஜ.க தலைவர்கள்: விரைவில் வர இருக்கும் மாற்றம்?

தமிழகத்திற்கு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் இருவரும் அடுத்தடுத்த நாட்களில் வருகை தந்து, தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த இருக்கிறார்கள்.

Update: 2022-11-14 10:03 GMT

தமிழகத்திற்கு விரைவில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்த நாட்களில் தமிழகத்திற்கு வருகை தந்து இருக்கிறார்கள். இவர்களுடைய இந்த வருகையின் முக்கிய நோக்கமே தமிழகத்தில் பல்வேறு முக்கிய தலைவர்கள் பா.ஜ கவில் இணைந்து மக்களுக்கு தோன்றி செய்ய வேண்டும் என்பதுதான். தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் தற்போது பா.ஜ.க வளர்ந்து வருவதாக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறார்.


கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் இருவரும் அடுத்தடுத்த நாட்களில் தமிழகத்திற்கு வந்து 75 வது ஆண்டு கொண்டாடும் இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக பிரதமர் 75 ஆண்டுகளை நிறைவு செய்த திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். அதேபோன்று உள்துறை அமைச்சர் 75 ஆண்டுகளை நிறைவு செய்த இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இருவரும் தங்களுடைய உரையை நிகழ்த்துவதற்கு தமிழகம் வந்து இருந்தார்கள்.


இந்த நிகழ்வின் போது மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி உடன் ஒரு மணி நேரம் காரில் பயணம் மேற்கொண்டார். அந்த பயணத்தின் போது பிரதமரின் முதல் கேள்வியாக தமிழகத்திற்கு என்ன செய்ய வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார். அவர் கட்சியை பற்றியோ அல்லது பா. ஜ.க வளர்ச்சி பற்றி எந்த விதமான கேள்வியும் கேட்கவில்லை என்று ஏற்கனவே அண்ணாமலை அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். எனவே தமிழக மக்களின் நன்மைக்காக பாஜக நிச்சயம் மாற்றத்தை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

Input & Image courtesy: Dinamalar News

Tags:    

Similar News