ஆழ்வார் திருநகரி செயல் அலுவலர் அட்டகாசம் - ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய பா.ஜ.க!
ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் திருக்கோவிலில் செயல் அலுவலர் நடவடிக்கை எடுத்து பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டம்.
அறநிலையத்துறையில் ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட இருக்கிறார்கள். குறிப்பாக பெருமாள் சயனத்தை முன்கூட்டியே கலைக்க உத்தரவிட்டு, கோவிலில் வழிபாட்டு நடைபெறும் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோவில் செயல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இவருடைய இந்து செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க உண்ணாவிரத போராட்டத்தை இன்று நடத்துகிறது. அறநிலையத்துறை ஆலயத்தை விட்டு வெளியே போ என்று கோஷத்துடன் இந்த விவகாரம் குறித்து பா.ஜ.கவினர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்துகிறார்கள்.
மேலும் ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மார்கழி மாத பகல் 10 இராபத்து மிக முக்கிய திருவிழாவாகும். பகல் பத்தாம் கடைசி நாளான இன்று ஆதிக்கேச பெருமாள் அன்று முழுவதும் சயனத் திருக்கோளத்தில் காட்சி தருவது வழக்கம். ஆனால் இந்த கோவில் செயல் அலுவலர் அஜித் என்பவர் வழக்கத்திற்கு மாறாக சயன கோலத்தை முன்கூட்டியே கலைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
தொன்றுதொட்டு கோவிலில் வழிபட முறைகளில் நடைமுறைகளில் தலையிட்டு பல வருடங்களாக சொர்க்கவாசல் திறக்கும் நேரத்தை மாற்ற செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் கோவிலில் உள்விவாரகாரங்களில் தலையிட அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு எந்த வித உரிமையும் கிடையாது. அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து பா.ஜ.க சார்பாக ஆதிநாதர் கோவிலில் முன்பு உண்ணாவிரதம் போட்டாட்டம் டிசம்பர் 29ஆம் தேதி அதாவது இன்று நடைபெற இருக்கிறது.
Input & Image courtesy: News