அச்சத்தில் தி.மு.க? ஆளுநருக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்..!

சென்னையில், கே.கே.நகரில் இயங்கி வரும் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில், பணியாற்றி வந்த ஆசிரியர் ராஜகோபாலன் மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.;

Update: 2021-05-28 15:36 GMT

சென்னையில், கே.கே.நகரில் இயங்கி வரும் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில், பணியாற்றி வந்த ஆசிரியர் ராஜகோபாலன் மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியசுவாமி, பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில் உள்நோக்கத்தோடு திமுக அரசு நடந்து கொண்டால், ஆட்சி கலைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.


இது பற்றி இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த சில தினங்களிலேயே, ஜெர்மனியின் நாஜி ஆட்சியை நினைவுபடுத்துவதாக தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


திமுக ஆட்சியால் பிராமணர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. இதன் காரணமாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும், அவர் குறிப்பிட்டதில், கடந்த 25 ஆண்டுகளில் திமுக அரசை நீதிமன்றங்களில் தோற்கடித்துள்ளேன். மீண்டும் திமுக ஆட்சிக்கு சவால் விடுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


தற்போது சுப்பிரமணியசுவாமி கடிதத்தால் திமுக அரசு கடும் அச்சத்தில் மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு தலைப்பட்சமாக பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் ஆட்சிக்கு சிக்கல் வரலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News