இளைஞர்கள் விவசாயத்தில் இணைந்தால் சாதிக்க முடியும்.. பாஜக துணை தலைவர் அண்ணாமலை பேச்சு.!

இளைஞர்கள் விவசாயத்தில் இணைந்தால் சாதிக்க முடியும்.. பாஜக துணை தலைவர் அண்ணாமலை பேச்சு.!

Update: 2020-12-14 11:44 GMT

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரில் உள்ள திருமண மண்டபத்தில் பாரதம் அறக்கட்டளை சார்பில் விவசாய பொருளாதார மேம்பாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட விவசாய சட்ட மசோதாக்கள் தாக்கம், சமூக மரம் வளர்ப்பு எதிர்கால முதலீடு, இந்திய விவசாயிகள் கையில் இந்திய வேளாண்மை, உழவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேளாண் உற்பத்தியாளர் அமைப்பின் பங்கு, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் தொழில் துவங்குவதற்கு மத்திய அரசின் கடன் மற்றும் மானிய திட்டங்கள், விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு அடையும் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார உதவிகள் குறித்து விவசாயிகளுக்கு கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் காணொலிக் காட்சி மூலம் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், பாஜக துணைத்தலைவருமான அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது: விவசாயிகளிடம் கூறும்பொழுது விவசாயத்தில் இளைஞர்களின் பங்கு 60 சதவீதம் வரை மட்டுமே உள்ளது.

விவசாயத்தில் கடும் உழைப்பு இருந்தால் இளைஞர்கள் சாதிக்க முடியும். மத்திய, மாநில அரசுகள் விவசாயத்திற்கு எவ்வளவு முன்னுரிமை தரப்படுகிறது என்பதை விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் இயற்கை முறை விவசாயத்தை முன்னிலைப்படுத்த வேண்டும். நம் முன்னோர்கள் விதை விதைத்து கடும் உழைப்பின் மூலம் விவசாயத்தை முன்னிலைப்படுத்தினர்.

ஆனால் தற்பொழுது புதிய இளம் விவசாயிகள் இதை கருத்தில் கொண்டு விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என கூறினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார், பாரத அறக்கட்டளை முருகானந்தம், ரஜ்சித் குமார், சீனிவாசன், துரைசாமி, ஹரிகிருஷ்ணன், திருமலைசாமி மற்றும் ஆனைமலை கோட்டூர் உடுமலைப்பேட்டை சேர்ந்த விவசாயிகள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 

Similar News