தி.மு.கவினரை கண்டித்து பா.ஜ.க மகளிர் அணி போராட்டம்: கைது நடவடிக்கை ஏன்?

பெண்களை இழிவாக பேசிய திமுக வினரை கண்டித்து பா.ஜ.க மகளிர் அணி போராட்டம் இதனை தடுக்க போலீசார் திடீரென கைது நடவடிக்கை.

Update: 2022-11-02 13:36 GMT

பெண்களை இழிவாக பேசும் தி.மு.கவினர்:

பெண்களை தி.மு.கவினர் இழிவாக பேசி வருவதாக கூறி பா.ஜ.க மகளிர் அணி சார்பில் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மகளிர் அணி மாநில தலைவியின் தலைமை தாங்கினார். மேலும் இதில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பெண்களை இழிவாக தி.மு.கவினர் பேசி வருவதை நிறுத்த வேண்டும் என்று கூறி பல்வேறு கண்டன கோஷங்களையும் எழுப்பினார்கள்.


முன்னதாக கண்டன வள்ளுவர் கூட்டத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி பெறாமல் போலீசார் தடுத்தனர். இருப்பினும் தொடர்ந்து நிர்வாகிகள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர், தடைகளை மீறி கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் இதுபற்றி பேசுகையில், பெண்களை தவறாக பேசுபவர்களை கைது செய்யாமல் அவ்வாறு பேசியவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராடுபவர்களை போலீசார் தடுப்பது தான் திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பு அம்சம்.


பெண்களை இழிவுபடுத்தும் பேசிய நபரை இதுவரை கைது செய்யவில்லை. தி.மு.க மக்களின் நம்பிக்கையை இழந்து இருக்கிறது. போலீசார் எங்களிடம் காட்டும் வீராப்பை தவறு செய்த நபர்கள் மீது காட்டி கைது செய்ய வேண்டும். பெண்களை இழிவாக பேசிய கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், சாலையில் நடந்து செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை தான் இருக்கும். எனவே முதலமைச்சர் ஆபாசமாக பேசும் தி.மு.கவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். இருந்தாலும் இந்த போராட்டத்திற்கு இடையில் தடைகளை மீறி நடந்ததால் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 450 பேரை போலீசார் பஸ்ஸில் ஏற்றி அழைத்து சென்று இருக்கிறார்கள். கைது செய்யப்பட்டவர்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News