கறுப்பர் கூட்டம் பார்ட் 2? தமிழ்க் கடவுள் முருகனைத் தி.க கூட்டத்தில் கொச்சைப்படுத்திய திருமாவளவன்!

கறுப்பர் கூட்டம் பார்ட் 2? தமிழ்க் கடவுள் முருகனைத் தி.க கூட்டத்தில் கொச்சைப்படுத்திய திருமாவளவன்!

Update: 2021-01-08 09:50 GMT
தமிழ் கடவுளாம் முருகனைக் கொண்டாடும் தைப்பூசத் திருவிழாவிற்கு, தமிழக அரசு பலரின் வேண்டுகோளை ஏற்று இந்த ஆண்டு முதல் அரசு விடுமுறை அளித்துள்ளது. இதுகுறித்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்து வரும் வேளையில், இது பொறுக்காமல் மறுபடியும் ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் விதமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனின் வெறுப்புப் பேச்சுக்கள் தொடர்கின்றன. 

Full View

பாலிமர் செய்தி வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் திராவிடர் கழகம் நடத்திய ஒரு விருது வழங்கும் விழாவில் பேசும் திருமாவளவன், முருகன் தமிழ்க் கடவுள் என்றால் அவருடைய அண்ணனாகிய விநாயகர் மட்டும் எப்படி ஹிந்தி கடவுள் ஆவார்? இருவரும் ஒரு அப்பா, அம்மாவிற்கு பிறந்தவர்கள் தானே என கொச்சையாக கேள்விகளை எழுப்பினார்.

தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை அளித்தால் மட்டும் நாம் தமிழர்களாக தலைநிமிர்ந்து விடுவோமா? என்று கேள்வி எழுப்பினார்.

முருகனை நம் கடவுள் என்று ஏற்றுக் கொண்டால், சனாதனம் என்ற வழுக்கு பாறையில் வைத்து விழுந்துவிடுவோம். இதன் காரணத்தினாலேயே தான் இதிலிருந்து திராவிடர் கழகம் முழுமையாக ஒதுங்கி நிற்பதாகவும் தெரிவித்தார். விநாயகருக்கும் முருகனுக்கும் இடையிலான ஞானப்பழக் கதையை கூறியவர், ஹிந்துக்கள் என்ற போர்வையில் அனைவரையும் கட்டாயப்படுத்தி இணைத்து குலதெய்வ வழிபாட்டை கூட, பெருந்தெய்வ இந்து வழிபாடாக மாற்றி வருவதாகக் குற்றம் சாட்டினார்.

அங்கே சுற்றி இங்கே சுற்றி கடைசியில் தமிழ்க் கடவுளாம் முருகனையும் கொச்சைப்படுத்தத் துணிந்து விட்டார்கள். தமிழ்நாட்டில் யுகாதி தெலுங்கு வருட பிறப்பிற்கு, அம்பேத்கரின் பிறந்த நாளுக்குக் கூட அரசு விடுமுறை இருக்கும் பட்சத்தில் தமிழர்கள் கொண்டாடும் தைப்பூசத்திற்கு விடுமுறை அளிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மற்ற இந்துக் கடவுள்களை எல்லாம் விமர்சிக்கும்போது வடநாட்டு கடவுள்களை விமர்சிக்கலாம், தமிழ்நாட்டு கடவுள்களை விமர்சிக்க தான் தவறு என்ற ரீதியில் மக்கள் மனம் இருந்ததாலோ என்னவோ, அடுத்து கறுப்பர் கூட்டம் கந்தசஷ்டிகவசத்தை அவமதித்து  மக்கள் மனநிலையை சோதித்துப் பார்த்தார்கள். அந்த அளவு ஆபாசமாக பேசுவது மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது என்பதால், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக முருகன் தமிழ் கடவுள் இல்லை, இந்து மதத்துடன் தொடர்புடைய எந்த கடவுள்களையும் நாம் வணங்கக் கூடாது. குலதெய்வ வழிபாடு மட்டுமே செய்ய வேண்டும். அங்கேயும் இந்து மதத்தின் செல்வாக்கு இருக்கக்கூடாது என்று கூறுகிறார்கள். 

இன்னும் கொஞ்ச நாளில் மிஷனரிகள் மற்றும் மதமாற்ற சக்திகளின் அடுத்த திட்டமாக குலதெய்வ கோவில்களையும் இவர்களை இழிவுபடுத்த தொடங்குவார்கள். இதை முளையிலேயே கிள்ளி எறிவது நல்லது. திருமாவளவனின் இத்தகைய பேச்சு சமூக வலைதளங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்து மதத்தை இழிவுபடுத்தி, கொச்சைப்படுத்தி வரும் அவர் மற்ற மதங்களை குறித்து வாயே திறப்பதில்லை. கறுப்பர் கூட்டம் அளவிற்கு இவை சர்ச்சையையும், கொந்தளிப்பையும்  உருவாக்கினால் தான் நல்லது.

Similar News