மதுரையில் துவங்கியது ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்ளுக்கான முன்பதிவு.!

மதுரையில் துவங்கியது ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்ளுக்கான முன்பதிவு.!

Update: 2021-01-09 13:30 GMT

மதுரையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு வீரர்களுக்கான முன்பதிவு அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு பகுதியில் இன்று முன்பதிவு துவங்கியது.

ஒரு வீரர் மூன்று இடத்திலும் பெயரை பதிவு செய்ய முடியாது. ஒரு இடத்தில்தான் அனுமதியளிக்கப்படுவார்கள் என்ற விதியுடன் துவங்கியது.

அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு மாடு பிடி வீரர்களுக்கான முன்பதிவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இங்கு தைத் திங்கள் முதல் நாள் பொங்கல் அன்றே ஜல்லிக்கட்டு போட்டி துவங்குகிறது. இதனையடுத்து பாலமேடு, அலங்காநல்லூர் பகுதியிலும் நடைபெறுகிறது.

மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ  பரிசோதனைகள் அவனியாபுரம் பி.எம்.எஸ்., துவக்கப்பள்ளியில் நடைபெற்றது. இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். அரசு விதிகளின்படி 300 மாடுபிடி வீரர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பரிசோதனையில் 1000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டாலும், வருவாய்த்துறை சார்பில் 350 நபர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு மாடுபிடி வீரர்களுக்கான பரிசோதனை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News