கொரோனா தொற்றை தடுப்பதற்காக தமிழகத்தில் இன்று 600 இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
ஜனவரி மாதம் முதல் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வதற்கு தகுதியுடையவர்கள் என தமிழக சுகாதாரத்துறை கூறியிருந்தது. இதனையடுத்து வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு முகாம் நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி தமிழகம் முழுவதும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 600 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Puthiyathalaimurai