#Breaking - பா.ஜ.க தலைவர் குஷ்பூ கைது!

#Breaking - பா.ஜ.க தலைவர் குஷ்பூ கைது!

Update: 2020-10-27 09:01 GMT

திருமாவளவன் ஹிந்துப் பெண்களை தவறாக பேசியதை தொடர்ந்து அவருக்கு எதிராக தமிழகம் முழுக்க போராட்டத்தை அறிவித்தது தமிழக பா.ஜ.க மகளிரணி.

இதையடுத்து சிதம்பரத்தில் நடைபெற இருந்த போராட்டத்தில் சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்த நடிகை குஷ்பூ பங்கேற்க இருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு திடீரென இந்த போராட்டத்திற்கு அனுமதியை மறுத்தது தமிழக காவல்த்துறை. இருப்பினும், போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என பா.ஜ.க தலைவர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில் திட்டமிட்டபடி, போராட்டத்திற்கு சென்றுக் கொண்டு இருந்த நடிகை குஷ்பு, முட்டுக்காடு அருகே தமிழக காவல்த்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News