புரட்சி தலைவர் எம்ஜிஆருக்கு பிறகு மக்கள் ஆதரவு அண்ணாமலைக்கு அதிகமாக இருக்கிறது - பாத்திமா அலி

Breaking News.;

Update: 2021-08-29 15:00 GMT

"2026'ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக முதல்வராக அண்ணாமலை வருவார்" என முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் அமைப்பின் தமிழக தலைவர் பாத்திமா அலி தெரிவித்துள்ளார்.

பாத்திமா அலி இது தொடர்பாக யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, "பா.ஜ.க'வில் உள்ள பிரச்சனைகளை அண்ணாமலை மிகவும் நேர்த்தியாக கண்டிப்பாக சமாளிப்பார். பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் கண்டிப்பாக சென்று புகார் கொடுக்கலாம். யாரையும் பா.ஜ.க கட்சி தடுக்கவில்லை. மற்ற கட்சிகளை போல் அடியாட்களை வைத்து மிரட்டுவதும், பியூட்டி பார்லருக்கு சென்று வயிற்றில் எட்டி உதைக்கும் கலாச்சாரத்தில் வளர்த்த கட்சியல்ல பா.ஜ.க கட்சி.

தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழகத்தில் பா.ஜ.க கட்சி சிறப்பாக மலரும். 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக முதல்வராக அண்ணாமலை வருவார். அப்படி வரக்கூடிய சூழ்நிலையில் இங்கு இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளும் காணாமல் போகும். அந்த பயத்தில் தான் இவர்கள் அண்ணாமலையை பார்த்து பயந்து கொண்டு இப்படிப்பட்ட கருத்துகளையும், தேவையில்லாமல் பேசுகின்றனர். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரு'க்கு பிறகு மக்கள் ஆதரவு அண்ணாமலைக்கு அதிகமாக இருக்கிறது. மக்கள் போற்றும் தலைவனாக அண்ணாமலை உருவெடுத்துள்ளார்" என பாத்திமா அலி கூறினார்.


Source - Asianet NEWS

Tags:    

Similar News