அரசு புறம்போக்கு நிலத்தில் சர்ச் கட்டுமான பணி - தடுத்து நிறுத்த கோரிக்கை !

இங்கு சர்ச் கட்டும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று 2020 ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சர்ச் கட்டுமான பணியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

Update: 2021-08-22 08:58 GMT

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே புறம்போக்கு நிலத்தில் சர்ச் கட்டி வருவதால் அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிசத் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சி சேனாபதிபாளையத்தில் பிரசித்தி பெற்ற கொங்கலம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் அருகே இருக்கும் அரசு புறம்போக்கு நிலத்தில் சிலர் அனுமதியின்றி சர்ச் கட்டி வருகின்றனர். கோவில் அருகே இருக்கும் புறம்போக்கு நிலத்தில் சர்ச் கட்டி வருவதால் அங்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் புறம்போக்கு இடம் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவர் ராஜகோபாலன் புகார் மனு அளித்துள்ளார்.

ஏற்கனவே இங்கு சர்ச் கட்டும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று 2020 ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சர்ச் கட்டுமான பணியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் எந்த ஒரு அனுமதியும் இன்றி கட்டுமான பணிகளை மீண்டும் சர்ச் நிர்வாகம் தொடங்கியுள்ளது. எனவே இந்த பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிசத் தலைவர் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

கோவில் அருகே இருக்கும் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து அனுமதியின்றி சர்ச் கட்டி வரும் சர்ச் நிர்வாகத்தை கண்டித்து விஷ்வ ஹிந்து அமைப்பு புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Source : DINAMANI 

Tags:    

Similar News