புரெவி புயல் சேதங்கள்.. மத்திய குழு இன்று, நாளையும் தமிழகத்தில் ஆய்வு.!

புரெவி புயல் சேதங்கள்.. மத்திய குழு இன்று, நாளையும் தமிழகத்தில் ஆய்வு.!

Update: 2020-12-29 07:46 GMT

புரெவி புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிடுவதற்கு மத்திய குழுவினர் டெல்லியில் இருந்து நேற்று விமானம் மூலமாக மதுரைக்கு வந்தனர். மதுரை விமான நிலையத்தில் நேற்று பிற்பகல் வந்திறங்கிய அவர்கள், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்திற்கு புறப்பட்டு சென்றனர். தமிழக அரசின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசிய அவர்கள் இரவில் ராமேசுவரத்தில் தங்கினர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், மண்டபம் ஆகிய இடங்களில் புயலால் சேதமடைந்த படகுகளை பார்வையிடுகின்றனர்.

இதன் பின்னர் அங்கிருந்து காலை 9.30 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு செய்கின்றனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு புதிய மாவட்டமாக உதயமான மயிலாடுதுறைக்கு செல்கின்றனர். மயிலாடுதுறை, கொள்ளிடம், ஆகிய இடங்களில் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்கள், குடிசைகளை மாலை 4 மணி முதல் 5.30 மணிவரை பார்வையிடுகின்றனர்.

அதன் பிறகு கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்குச் செல்லும் மத்திய குழுவினர், மாலை 5.30 மணியில் இருந்து 6.30 மணிவரை சேதமடைந்த பயிர்களை பார்வையிடுகின்றனர். இதனையடுத்து நாகப்பட்டினத்திற்கு வந்து அங்கு இரவில் தங்குகின்றனர். நாளை (புதன்கிழமை) நாகை மாவட்டம், திருவாரூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

இதனை தொடர்ந்து திருச்சியில் இருந்து டெல்லிக்கு இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு செல்கின்றனர். சேதங்களை மத்திய அரசுடன் பகிர்ந்து கொண்ட பின்னர் உரிய இழப்பீடு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Similar News