ஓட்டலில் புகுந்த பேருந்து !அலறிய பொதுமக்கள் !

விருதுநகரில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று, சாலை அருகே இருந்த ஓட்டலில் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-08-03 05:23 GMT

விருதுநகரில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று, சாலை அருகே இருந்த ஓட்டலில் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூரிலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து, அருப்புக்கோட்டை அருகே, பாலவனத்தம் என்ற கிராமத்திற்குள் சென்றபோது, திடீரென பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை அருகே இருந்த ஓட்டலில் புகுந்தது. பேருந்தில் பயணம் செய்த சிலர் இந்த விபத்தில் காயமடைந்தனர். இந்த விபத்தால் ஓட்டல் முழுவதும் சேதமானது.


இது குறித்து தகவல் அறிந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்ததால் அங்கு இருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: News 7

Image Courtesy: News 7 Tamil

https://news7tamil.live/bus-accident-near-virudhunar.html

Tags:    

Similar News