தமிழகம், கர்நாடகம் இடையே மீண்டும் பேருந்து சேவை தொடக்கம் !

கடந்த 119 நாட்களுக்குப் பின்னர் தமிழக, கர்நாடக மாநிலங்களுக்கு இடையே நள்ளிரவு முதல் பேருந்து போக்குவரத்து சேவை மீண்டும் துவங்கியது.

Update: 2021-08-23 02:43 GMT

119 நாட்களுக்குப் பின்னர் தமிழக, கர்நாடக மாநிலங்களுக்கு இடையே நள்ளிரவு முதல் பேருந்து போக்குவரத்து சேவை மீண்டும் துவங்கியது.

கொரோனா தொற்று காரணமாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே ஏப்ரல் மாதம் இறுதியில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. தமிழகத்தில் இருந்து தினமும் கர்நாடக மாநிலத்திற்கு 450 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. அதே போன்று கர்நாடகாவில் இருந்து தினமும் 250 பேருந்துகள் தமிழகத்திற்கு இயக்கப்பட்டு வந்தன.


இந்நிலையில், கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் இருந்து கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலத்திற்கு பேருந்து சேவை தொடங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அதே போன்று கர்நாடக அரசும் தமிழகத்துக்கு பேருந்து சேவை தொடங்கப்படும் என அறிவித்தது.

இந்நிலையில், கடந்த 119 நாட்களுக்குப் பின்னர் நள்ளிரவு முதல் இரண்டு மாநில பேருந்து போக்குவரத்தும் துவங்கியது. பெங்களூருவில் இருந்து ஓசூருக்கு தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளும், அதனை போன்று தமிழகத்தில் இருந்து பெங்களூருவில் உள்ள தொழிற்சாலை மற்றும் ஐடி கம்பெனிகளுக்கு சென்று வரும் பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Source & Image Courtesy - Puthiyathalaimurai

Tags:    

Similar News