பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவுமாம்.? ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி.!

பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவுமாம்.? ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி.!

Update: 2021-01-05 13:18 GMT

கேரளாவில் பறவைக் காய்ச்சல் கோழி மற்றும் வாத்துக்களுக்கு பரவி வருகின்றது. தற்போது இவை மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது: “கேரளாவில் பரவி வருகின்ற பறவை காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவலாம். பறவை காய்ச்சல் தமிழகத்தில் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழைக்காலம் என்பதால் டெங்கு பரவாமல் தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு 5 மடங்கு குறைந்துள்ளது.

ஓட்டல் ஊழியர்கள் 8 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 166 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும், கேரள மாநிலத்தின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் வாத்து மற்றும் கோழிகள் கொத்து கொத்தாய் செத்து மடிந்து வருகிறது. இதனால் கேரளா மக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர்.

ஏற்கெனவே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. தற்போது பறவைக்காய்ச்சல் என கூறி வருகின்றனர். இந்நிலையில், இந்த காய்ச்சல் தமிழகத்திற்கும் பரவாமல் தடுக்க அங்கிருந்து கொண்டு வரப்படும் கோழிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், பரவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவலாம் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்திருப்பது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Similar News