பொருளாதார தீண்டாமை... செய்கிறதா இந்து சமய அறநிலையத்துறை... இந்து முன்னணி!

ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்ய இந்து முன்னணி வலியுறுத்தல்.

Update: 2023-04-18 02:15 GMT

ஹிந்து முன்னணி அமைப்பினர் சார்பாக ஆலயங்களில் வசூலிக்கப்படும் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக ஒவ்வொரு ஆலயங்களிலும் சாமியே தரிசனம் செய்வதற்கு சிறப்பு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் தமிழ் புத்தாண்டு தினத்தில் கோவில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் தமிழகத்தில் ஆன்மீக அலை அதிகமாக இருந்து வருகிறது. இதன் பக்தியே பல நபர்கள் காசாக்கும் வழிகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள் குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.


சிறப்பு நாட்களில் நிறைய பக்தர்கள் கோவிலுக்கு வந்தாலும் அவர்கள் மனநிறையோடு சுலபமாக இறைவனை தரிசித்து செல்ல முடியாத ஒரு சூழ்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கி இருக்கிறது. குறிப்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாணத்திற்கு கட்டணம் வைத்து வசூல் பேட்டை நடத்த முன்பதிவு அறிவிப்பு 500, 200 என வெளியிடப்பட்டிருக்கிறது.


அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பணம் படைத்தோர் போன்றவர்களுக்கு விரைவு தரிசனம், பாமர பக்தர்களுக்கு நீண்ட நெட்டு நேரம் காத்திருந்தும் தரிசனம முறையாக நடைபெறவில்லை. குறிப்பாக பக்தர்களை பொருளாதார அடிப்படையில் பிரித்து பொருளாதார தீண்டாமையை இந்து சமய அறநிலையத்துறை திணிக்கிறது. ஆலயங்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் பொருளாதார அடிப்படையில் பக்தர்களை பிரிக்கக்கூடாது என்று ஹிந்து முன்னணி போராடி வருவதாக இந்து சமய மாநில தலைவர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News