பிரதமர் பற்றி கேலிச்சித்திரம்! விகடனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய இஸ்லாமிய பெண்கள்!

பிரதமர் பற்றி கேலிச்சித்திரம்! விகடனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய இஸ்லாமிய பெண்கள்!

Update: 2021-01-29 11:45 GMT

டெல்லியில் விவசாயிகள் போர்வையில் மறைந்திருந்த தீவிரவாதிகளுக்கு ஆதரவாக சித்தரித்து அவர்களை பிரதமர் மோடி சாப்பிடுவது போன்ற ஒரு கேலிச்சித்திரத்தினை வாரப்பத்திரிகையான விகடன் வெளியிட்டது.

இந்த கேலிச்சித்திரத்துக்கு தமிழக பா.ஜ.க.வினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு நாட்டுக்காக உழைத்துக்கொண்டிருக்கும் பிரதமரை இப்படி சித்தரிப்பது சரியில்லை எனவும் பா.ஜ.க.வில் கண்டனங்கள் வலுத்து வருகிறது.

டெல்லியில் நடைபெற்றது விவசாயிகளின் போராட்டம் இல்லை. விவசாயிகள் போர்வையில் மறைந்திருந்த காலிஸ்தான் தீவிரவாதிகள் எனவும் பா.ஜ.க. தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. அதனை நிரூபிக்கும் வகையில் கடந்த ஜனவரி 26ம் தேதி நடந்த வன்முறை சம்பவமே சாட்சியாக உள்ளது. டிராக்டர் பேரணி என்று நடத்தி டெல்லியில் மிகப்பெரிய கலவரத்தை நடத்துவதற்கு திட்டமிட்டு செயல்பட்டனர்.

அவர்களின் சதிகளை போலீசார் முறியடித்தனர். அந்த வன்முறை சம்பவத்தில் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காயமடைந்த போலீசாரை சந்தித்து ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரதமரை ஒரு ராட்சசன் போல சித்தரித்து பிரதமர் நரேந்திர மோடியை கொச்சைப்படுத்தும் வகையில் விகடன் குழுமம் ஒரு கேலிச்சித்திரத்தை வெளியிட்டது. இதற்கு தமிழகத்தில் பா.ஜ.க.வில் மட்டுமின்றி இஸ்லாமிய பெண்கள் மத்தியிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த கேலிச்சித்திரத்துக்கு எதிராக சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் பா.ஜ.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், முஸ்லீம் ராஷ்ட்ரீய மன்ச் சார்பில் ஆனந்த விகடன் பத்திரிக்கை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த தலைவர் பாத்திமா அலி உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றும் தமிழகத்தில் பல இடங்களில் ஆனந்த விகடனை பா.ஜ.க.வினர் புறக்கணித்து வருகின்றனர். சில இடங்களில் அந்த புத்தகத்தை குப்பையில் தூக்கிப்போட்டு தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
 

Similar News