சிறை கைதிகளின் பொருட்களை விற்று ரூ.100 கோடி ஊழல்: உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

மதுரை மத்திய சிறையில் சிறைக்கைதிகள் தயாரித்த பொருட்கள் மூலமாக சுமார் ரூ.100 கோடி அளவில் ஊழல் செய்திருப்பதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக விசாரணை செய்ய வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள சம்பவம் காவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-11-16 12:28 GMT

மதுரை மத்திய சிறையில் சிறைக்கைதிகள் தயாரித்த பொருட்கள் மூலமாக சுமார் ரூ.100 கோடி அளவில் ஊழல் செய்திருப்பதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக விசாரணை செய்ய வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள சம்பவம் காவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சென்னை புழல், வேலூர், மதுரை, பாளையங்கோட்டை, சேலம், கோவை உள்ளிட்ட இடங்களில் மத்திய சிறைச்சாலைகள் உள்ளது. அங்கு பல ஆயிரம் கணக்கான சிறைக்கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அது போன்று இருப்பவர்கள் தங்களுக்கு தெரிந்த தொழில்களை சிறையிலேயே செய்து அதன் மூலம் வருவாய் ஈட்டுவதை வாடிக்கையாகவும் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


அது மட்டுமின்றி அதில் கிடைக்கும் வருவாயில் தனது குடும்பத்தாருக்கும் பல சிறைக்கைதிகள் பணம் அனுப்பி வருகின்றனர். அது போன்று சிறைக்கைதிகள் தயாரித்து வழங்கும் பொருட்களை வைத்து சிறை காவலர்கள் பல கோடி ரூபாய் அளவிற்கு கொள்ளையடிப்பதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அதன்படி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், சிறைக்கைதிகள் உரிமை மைய இயக்குநருமான புகழேந்தி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த பொருட்களை அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அனுப்பியதாக போலியான கணக்குகளை தயார் செய்து பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளனர். அதன்படி கடந்த 2016 முதல் 2021 மார்ச் மாதம் வரையில் சுமார் 100 கோடி ரூபாய் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றி தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆதாரங்கள் பல பெறப்பட்டுள்ளாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஊழல் குறித்து விசாரணை நடைபெறுவதற்கு உள்துறை செயலாளர், சிறைத்துறை டிஜிபி ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார். விரைவில் விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திடீரென்று மதுரை சிறையில் 100 கோடி ரூபாய்க்கு ஊழல் நடைபெற்றதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த காவலர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Tags:    

Similar News