கடனை செலுத்தக்கோரி சுயஉதவிக்குழு பெண்ணுக்கு மிரட்டல்: தனியார் நிதிநிறுவன ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு.!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வங்கி கடனை செலுத்தக்கோரி மகளிர் சுய உதவிக்குழு தலைவி வீட்டுக்கு சென்று மிரட்டல் விடுத்த தனியார் நிதிநிறுவன ஊழியர்கள் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2021-06-11 11:13 GMT

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வங்கி கடனை செலுத்தக்கோரி மகளிர் சுய உதவிக்குழு தலைவி வீட்டுக்கு சென்று மிரட்டல் விடுத்த தனியார் நிதிநிறுவன ஊழியர்கள் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 3 வாரங்களுக்கு மேலாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். எந்த ஒரு வருமானம் இன்றி சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.


 



இது போன்ற சமயங்களில் நிதிநிறுவனம் மற்றும் தனியார் வங்கிகள் கொடுத்த கடனை வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே வேலை இன்றி வீட்டில் இருக்கும் மக்களிடம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிவது போன்று கடனை வசூல் செய்து வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மகளிர் குழு பெண்களிடம் தனியார் நிதிநிறுவனங்கள் மிரட்டி பணம் வசூல் செய்து வருவதை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகின்றனர்.




 


இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, காந்தி நகர் பாலன் தெருவை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மனைவி சித்ரா, இவர் மகளிர் சுய உதவிக்குழுவின் தலைவியாக உள்ளார். இவர் அந்தப்பகுதி மக்களுக்கு தனியார் வங்கி மற்றும் நுண் நிதி நிறுவனம் மூலம் கடன் பெற்று தந்துள்ளார். இதனிடையே, கொரோனா ஊரடங்கின் காரணமாக பொதுமக்கள் வேலையின்றி தவித்து வருகின்ற நிலையில், மகளிர் குழு உறுப்பினர்கள் கடந்த சில வாரங்களாக தவணை செலுத்தாமல் இருப்பதாக கூறப்படுகிறது.




 


இந்நிலையில், தனியார் வங்கி ஊழியர்கள் விமல், கருப்பசாமி மற்றும் நுண் நிதி நிறுவன ஊழியர் வீரக்குமார் உள்ளிட்டோர் சித்ராவின் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து, மகளிர் குழுவினரிடம் பணம் வசூல் செய்து தரும்படி மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மிகவும் மனமுடைந்த சித்ரா குது பற்றி கோவில்பட்டி மேற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் தனியார் நிதி நிறுவனங்களின் ஊழியர்கள் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதே போன்ற நிலைமைதான் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாகும்.

Similar News