சென்னை: ஒரேநாளில் முககவசம் அணியாத 2,142 பேர் மீது வழக்குப்பதிவு.!

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரங்கு அமலில் உள்ளது. இது போன்ற சமயங்களில் வெளியில் செல்லும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Update: 2021-06-19 09:12 GMT

சென்னையில் நேற்று ஒரே நாளில் முகக்கவசம் அணியாமல் இருந்ததாக 2,142 பேர் மீது வழக்குகளும், சமூக இடைவெளி கடைப்பிடிக்காதது தொடர்பாக 125 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.




 


கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தற்போது வரை அனைவரும் முககவசம் அணிந்துக் கொண்டுதான் இருக்கும் நிலை உள்ளது.


 



இந்நிலையில், சென்னையில் முகக்கவசம் அணியாத 2,142 நபர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத 125 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரங்கு அமலில் உள்ளது. இது போன்ற சமயங்களில் வெளியில் செல்லும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News