டெல்லியில் இன்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் ! மேகதாது அணை விவாதிக்க வாய்ப்பு!

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 13வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.

Update: 2021-08-31 06:11 GMT

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 13வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வரும் நிலையில், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டம் அந்த குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில் நடைபெறுகிறது. அப்போது தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், கர்நாடக அரசு மேகதாது அணையை கட்ட வேண்டும் என்ற பிடிவாதத்துடன் செயல்படும் விவாதமும் இதில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

Source: News7

Image Courtesy:Britannica

https://news7tamil.live/cauvery-river-management-authority-meeting-is-being-held-today.html

Tags:    

Similar News