காவல் நிலையங்களில் சி.சி.டி.வி.கேமரா.. தமிழக அரசுக்கு கெடு விதித்த உச்சநீதிமன்றம்.!

தமிழக காவல்நிலையங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றம் கெடுவிதித்துள்ளது.

Update: 2021-03-03 06:58 GMT

தமிழக காவல்நிலையங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றம் கெடுவிதித்துள்ளது.

தமிழக காவல் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்து செல்பவர்கள் சித்ரவதை செய்யப்பட்டு இறக்கும் நிலை ஏற்படுகிறது. இது போன்ற மனித உரிமை மீறல்கள் நடைபெறாமல் இருப்பதற்காக சிசிடிவி கேமராவை பொருத்த உச்சநீதிமன்றம் அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டது.


 



மேலும், இது தொடர்பாக விரிவான பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்யவும். ஆணையிட்டிருந்தது. ஆனால் அதனை செய்யாதது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இதனை தொடர்ந்து இந்த ஆண்டிற்குள் அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


 



நீதிமன்றம் அறிவுறுத்தியது போன்று அனைத்து காவல் நிலையங்களிலும் கேமரா பொருத்தப்பட்டால், போலீசாரின் அத்துமீறல்கள் குறையும் என்பது மனித ஆர்வலர்களின் கோரிக்கையும் ஆகும்.

Similar News