நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது மத்தியக் குழு.!

நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது மத்தியக் குழு.!

Update: 2020-11-28 18:29 GMT
இரு நாட்களுக்கு முன் தமிழகத்திலும், புதுவையிலும் நிவர்' புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு வரும் 30ந்தேதி தமிழகம் வர உள்ளது. வங்கக்கடலில் உருவான நிவர் புயல், சென்ற  26ம் தேதி, புதுச்சேரி  - மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. இதனால், தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பாதிப்பு ஏற்பட்டது. புயலால் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கும், மற்றும் பலத்த காயம் அடைந்தவர்களுக்கும் மத்திய மாநில அரசுகள் உடனடி நிவாரணத் தொகையை அளித்தது. மாநில அரசு சார்பில் 6 இலட்சமும், மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நான்கு இலட்சமும் அறிவிக்கப்பட்டன. 

இந்த நிலையில் நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு வரும் 30ம் தேதி தமிழகம் வருகிறது. சென்னை வரும் ஆய்வுக்குழுவினர் டிச,1ம் தேதி முதல் ஆய்வுப் பணிகளை துவக்க உள்ளது. தமிழகத்தை தொடர்ந்து, புதுச்சேரியிலும் மத்திய குழு ஆய்வு செய்ய உள்ளது. இதன் பின்னர், இந்த குழு தாக்கல் செய்யும் அறிக்கை அடிப்படையில் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும்.

Similar News