நெல்லில் ஈரப்பதம்: மத்திய உணவுத்துறை அதிகாரிகள் டெல்டா மாவட்டங்களுக்கு வருகை!

மத்திய உணவுத்துறை அதிகாரிகள் நாளை (அக்டோபர் 19) டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர். டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் அறுவடை செய்யப்பட்ட நெல்லின் ஈரப்பதம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக நெல்லின் ஈரப்பதத்தை 20 சதவீதம் வரை உயர்த்தவது பற்றி மத்திய உணவுத்துறை அதிகாரிகள் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்கின்றனர்.

Update: 2021-10-18 09:08 GMT

டெல்டாவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். அதாவது கொள்முதல் செய்யும் நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால் தற்போது டெல்டாவில் மழை விட்டு விட்டு பெய்து வரும் சூழ்நிலையில், நெல்லின் ஈரப்பதம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக விவசாயிகளிடமிருந்து அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்வதற்கு மறுத்து வருகின்றனர். இதனால் நெல் கொள்முதல் செய்வதற்கு குறைந்த பட்சம் 20 நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். மழைக்காலங்களில் நெல்லின் ஈரப்பதம் 20 சதவீதம் இருக்க வலியுறுத்தி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கை ஏற்று 20 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய தமிழக உணவுத்துற அமைச்சர் மத்திய உணவுத்துறை அமைச்சர் பியூஷ் கோயிலிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதனிடையே மத்திய உணவுத்துறை அதிகாரிகள் குழு நாளை டெல்டா மாவட்டத்திற்கு வருகை தர உள்ளது. நெல்லின் ஈரப்பதம் பற்றி ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். இதன்பின்னர் மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source,Image Courtesy: News 18 Tamilnadu

Tags:    

Similar News