மத்திய அரசு திட்டங்களால் தமிழகத்தில் 20 லட்சம் மக்கள் பயன் - மத்திய அமைச்சர் தகவல்!
மத்திய அரசின் திட்டங்களால் தமிழகத்தில் மதுரையில் குறிப்பாக 20 லட்சம் பேர் பயனடைந்து உள்ளார்கள்.
மதுரையில் அரசு விருந்தினர் மாளிகையில் மத்திய அரசின் திட்டங்களை நடைமுறைப் படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மத்திய துறை அமைச்சர் ஸ்ரீ பகவத் குப தலைமையில் நேற்று கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்பொழுது மத்திய அரசு திட்டங்களில் பயன் பெற்ற 160 களின் நேரடி பார்வையின் கீழ் இந்த திட்டம் குறிப்பு துணை அமைச்சர் கேட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு முறையாக செயல்படுத்தி வருகிறது. அது பற்றி மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. மத்திய அரசு ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதன் மூலம் ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனர்.
மதுரையில் 4.44 லட்சம் வீடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் 2024ஆம் ஆண்டு நிறைவடையும். அதுபோல மதுரை மாவட்டத்தில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் சுமார் 20 லட்சம் பேர் பயனடைந்து இருக்கிறார்கள். இது போல் தமிழகம் முழுவதும் ஏராளமானோர் பயனடைந்து கொண்டு இருக்கிறார்கள். இந்தியா முழுவதும் யூரியா உள்ளிட்ட உரத்தட்டுப்பாடுகள் இல்லை. மாநில அரசின் தேவைகளுக்கு ஏற்ப உரங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
Input & Image courtesy:Dinamalar