தமிழக மீன் வளத்துறை மேம்பாட்டிற்கு ரூ. 3000 கோடி வழங்கிய மத்திய அரசு: மத்திய இணையமைச்சர் தகவல்!

நீர்வாழ் உயிரின நோய்கள் தடுப்புக்கான தேசிய திட்டத்திற்கு ரூ.33.78 கோடி ஒதுக்கீடு.

Update: 2023-03-01 01:43 GMT

பிரதமரின் மத்சய சம்படா திட்டத்தின் கீழ் தேசிய நீர்வாழ் உயிரினங்களை நோயிலிருந்து பாதுகாப்பதற்கான திட்டத்தின் 2-வது கட்டத்தை செயல்படுத்த ரூ.33.78 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தேசிய உவர் நீர் மீன்வளர்ப்பு நிறுவனத்தில் மரபணு மேம்பாட்டுத் திட்டத்தை நேற்று தொடங்கிவைத்துப் பேசிய அவர், மீன்களுக்கு ஏற்படும் நோய்கள் பற்றி தகவல் தெரிவிக்கவும், அறிவியல் பூர்வமான உள்ளீடுகள் கிடைப்பதற்கும், ரிப்போர்ட்ஃபிஷ்டிசீஸ் என்ற செயலி தொடங்கப்பட்டுள்ளது.


மீன்களுக்கு ஏற்படும் நோய்கள் பற்றிய தகவல்களை நேரடியாக மாவட்ட மீன்வள அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும், விஞ்ஞானிகளிடமிருந்து தொழில்நுட்ப உதவியை பெற்று பிரச்சனைக்கு தீர்வு காணவும் இந்த செயலி உதவும் என்று அவர் கூறினார். காப்பீட்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து இறால்களுக்கான காப்பீட்டு திட்டத்தை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் உவர் நீர் மீன் வளர்ப்புக்கான மத்திய நிறுவனம் இன்று தொடங்கியுள்ளது. புயல், வெள்ளம் மற்றும் நோய் பரவல் ஆகியவற்றால், இறால்கள் வளர்க்கும், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க இந்தத் திட்டம் உதவும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.


அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் உள்நாட்டு வெள்ளை இறாலில் புதிய வகையை உருவாக்க நமது விஞ்ஞானிகள் கடுமையாக பாடுபடுவார்கள் என்று தாம் நம்புவதாகவும் பர்ஷோத்தம் ரூபாலா கூறினார். மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கும், மீன் சார்ந்த தொழில்முனைவோருக்கும் உதவி செய்யும் இத்தகைய முக்கியமான திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க தமது அமைச்சகம் எப்போதும் தயாராக உள்ளது என்று அவர் கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News