கனமழை பெய்ய வாய்ப்பு.. விவசாயிகளுக்கு வேளாண்துறை முக்கிய அறிவிப்பு.!

கனமழை பெய்ய வாய்ப்பு.. விவசாயிகளுக்கு வேளாண்துறை முக்கிய அறிவிப்பு.!

Update: 2020-11-23 11:42 GMT

தமிழகத்தில் வருகின்ற 24, 25 மற்றும் 26ம் தேதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதவாது நாளை மறுநாள் 25-ம் தேதி மாமல்லபுரம்- காரைக்கால் இடையே புயல் கரையை கடக்கிறது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 23ம் தேதி உருவாகும் என அறிவித்த நிலையில் அது நேற்றே உருவானது. இதன் பாதையை வானிலை மையம் கணித்துள்ளது.


இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் தமிழகத்தில் நாளை முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்தது.
இந்நிலையில், புயல் ஏற்படும்போது என்னென்ன முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும் என்பன பற்றி தமிழ்நாடு பேரிடர் மீட்பு முகமை தகவல் வெளியிட்டிருந்தது. 


தற்போது வேளாண்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தற்சமயம் சம்பா நெற்பயிர், சிறுதானிய பயிர்கள், பயறுவகை பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்கள் உள்ளிட்ட பயிர்களுக்கான பயிர்காப்பீடு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஈரோடு, கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் 30 தேதிக்குள்ளும், தஞ்சாவூர், அரியலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் டிசம்பர் 15ம் தேதிக்குள்ளும் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


இது போன்று பயிர் காப்பீடு செய்வதால் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை மீண்டும் கிடைக்கும். எனவே விவசாயிகள் அனைவரும் இந்த அறிவிப்பை பின்பற்றி அந்தந்த மாவட்டங்களில் விவசாய பயிர்களை உடனடியாக காப்பீடு செய்துவிடுங்கள். சேதங்களில் இருந்து விடுபட்டு மீண்டும் விவசாயம் செய்வதற்கான தொகை நமக்கு கிடைக்கும். 
 

Similar News