அடுத்த 3 மணி நேரத்திற்குள் 10 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம்.!

அடுத்த 3 மணி நேரத்திற்குள் 10 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம்.!

Update: 2020-11-15 10:23 GMT

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வங்கக் கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கிழக்கு திசை மற்றும் காற்று உள்ளே நுழைந்ததால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மீனம்பாக்கம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அண்ணாநகர், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை 4 மணி முதல் கனமழை பெய்து வருகிறது.

அதே போன்று செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம், மாமல்லபுரம், திருகழுக்குன்றம், திருப்போரூர் பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது.
மேலும், தஞ்சாவூர், கும்பகோணம், நாகப்பட்டினம், வேளாங்கன்னி, நாகூர், கீழ்வேளூர், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது.

இந்நிலையில், இன்றும், நாளையும் மழை தொடரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Similar News