தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்.!
தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்.!
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பிப்ரவரி 22ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வேலூர், திருவண்ணாமலை, சேலம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சியால் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.