தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் அதி கனமழையும் பெய்கிறது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பருவமழை பெய்யத்தொடங்கியதும் மிக கனமழை பெய்து வருகிறது. சராசரியை விட மிக அதிகமாக மழை பெய்வதால் ஏரி, குளம், குட்டை, ஆறு என எங்கு பார்த்தாலும் வெள்ளநீர் பாய்ந்து ஓடுகிறது. அந்த வகையில் திருப்பத்தூர், விழுப்புரம், கன்னியாகுமரி, பெரம்பலூர், கோவை ஆகிய மாவட்டங்களில் இயல்லை விட 100 சதவீதத்தை கடந்து மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும், 2 நாட்களில் கடலோர மாவட்டங்களில் விடாமல் மழை கொட்டி வருகிறது. இதனால் அங்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குமரி கடல் மற்றும் இலங்கை கடற்பகுதியில் நிலவுகின்ற வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (நவம்பர் 28) மழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 12 வட கடலோர மாவட்டங்களுக்கும் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், அரியலூர், பெரம்பலூர், சேலம், தருமபுரி, திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Source, Image Courtesy: Daily Thanthi