தமிழகத்தில் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் தகவல்.!

தமிழகத்தில் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் தகவல்.!

Update: 2021-01-14 11:03 GMT

தமிழகத்தில் வழக்கமாக அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். ஆனால் இந்த வருடம் வடகிழக்கு பருவமழை 12ம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், தற்போது 16ம் தேதி வரை சில மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளது.

அந்த வகையில் வளிமண்டலத்தில் நிலவி வந்த மேலடுக்கு சுழற்சி, தற்போது மாலத்தீவு மற்றும் குமரிக்கடல் பகுதியை ஒட்டி காற்றழுத்த தாழ்வு நிலையாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தென் கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்றும் நாளையும் மழை பெய்யும். அதே போன்று நாளை மறுதினம் (சனிக்கிழமை) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Similar News